உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக்கில் வாலிபரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் சேர்ந்த சின்னசாமி மகன் பார்த்தீபன், 35; இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சித்தலுார் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி கொண்டு திரும்பினார். அங்கிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த காசி மகன் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர், முன்விரோதம் காரணமாக பார்த்தீபனிடம் தகராறு செய்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !