மேலும் செய்திகள்
மாணவி மாயம் போலீஸ் விசாரணை
25-Oct-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில், 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரைச் சேர்ந்தவர் ராகவன் மகள் சரண்யா, 29; இவருக்கும், இவரது பெரியப்பா மதுரமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 20ம் தேதி இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது தொடர்பாக இரு தரப்பு புகாரின் பேரில், சரண்யா, இளையராஜா, ராணி, ராகவன் உட்பட 9 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Oct-2024