உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய தம்பி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன், 64; இவரது தம்பி குமார், 54; இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி காலை இதுகுறித்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த குமார், முத்துக்கருப்பனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் குமார் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை