மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
14-Mar-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே கடன் பணத்தை கேட்டு, பெண்ணை திட்டி தாக்கிய தம்பதியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமி,32; இவர் அதே ஊரை சேர்ந்த குமார்,52; என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரம் கடன் வாங்கினார். இந்நிலையில், முத்துலட்சுமி பணம் தராததால், கடந்த 14 ம் தேதி குமார், அவரது மனைவி செல்வி,45; ஆகியோர் முத்துலட்மியின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் குமார் மற்றும் செல்வி ஆகிய இருவரும் முத்துலட்சுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், தம்பதியினர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Mar-2025