மேலும் செய்திகள்
புகையிலைப் பொருள் விற்ற மளிகை வியாபாரிக்கு சிறை
17-Jul-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மளிகை பாக்கி தராததால் பெண்ணை கடையில் அடைத்து பூட்டி வைத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மதியழகன் மனைவி சவுந்தர்யா, 29; மூங்கில்துறைப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் நடத்தி வருகிறார்.இவர், அதே பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கி பாக்கி வைத்துள்ளார்.கடைக்காரர்களான ரவிக்குமார், 43; இவரது மனைவி பரமேஸ்வரி, 41; ஆகிய இருவரும், சங்கீதாவை கடைக்கு வரவழைத்து, பாக்கி தொகையை கொடுத்து விட்டு செல்லும்படி கடையில் இருந்த ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளனர். பின் அங்கிருந்து தப்பிய சவுந்தர்யா, மூங்கில்துறைப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ரவி, பரமேஸ்வரி ஆகியோர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Jul-2025