உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் சேதம் ஒருவர் மீது வழக்கு

பைக் சேதம் ஒருவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலத்தில் முன்விரோதம் தொடர்பாக ஒருவரை தாக்கி, பைக்கை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.வரஞ்சரம் அடுத்த மலைக்கோட்டாலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராமர்,38; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஜயகுமார்,25; என்பவருக்கும் தெருவில் வண்டி நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 23ம் தேதி ராமர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது விஜயகுமார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து ராமரை தாக்கி, அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் பைக்கினை உடைத்து சேதப்படுத்தினார். இது தொடர்பாக ராமர் அளித்த புகாரின் பேரில் விஜயகுமார் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை