உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி; கச்சிராயபாளையம் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ராஜா,21; இவர் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி ராஜா, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை