உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணம் கொடுத்ததில் பிரச்னை தம்பதி மீது வழக்கு பதிவு

பணம் கொடுத்ததில் பிரச்னை தம்பதி மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தராத தம்பதியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர் . கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் பாபு மனைவி சவுந்தர்யா, 28; கணவர் பாபு, சின்னசேலம் நைனார்பாளையத்தை சேர்ந்த குப்பன் மகன் ஜெயவேல், 39; இருவரும் நண்பர்கள். குடும்ப செலவுக்காக ஜெயவேலு மற்றும் இவரது மனைவி சவுமியா இருவரும் பணம் கேட்டனர். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு சவுந்தர்யா இரு தவணைகளாக ரூ.14 லட்சம் பணம், ஜெயவேலு, சவுமியாவிடம் வழங்கினர். வெகு நாட்களாகியும் சவுமியா குடும்பத்தினர் பணத்தை திரும்ப தராததுடன், இதுகுறித்து கேட்ட சவுந்தர்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சவுந்தர்யா அளித்த புகாரின் பேரில், சவுமியா மற்றும் ஜெயவேல் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி