மாவட்ட அலுவலர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மாவட்ட அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்துது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வகுப்பிற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் மாவட்ட அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு வரும் 23, 24 ஆகிய 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை வழங்க உள்ளனர். வரும் 2027 ஜனவரி 10 முதல் 24ம் தேதி வரை சுய கணக்கெடுப்பும், ஜனவரி 25 முதல் 28 வரை வீடு வீடாக கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.