மேலும் செய்திகள்
ஸ்ரீ சரஸ்வதி பள்ளியில் திருக்குறள் போட்டி
09-Jan-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி வாசவி மஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட தொடர்பாளர் அய்யாமோகன், கிருஷ்ணசாமி, உதயகுமார் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 90 பேருக்கு சான்றிதழ் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை விழாவிற்கு தலைமை தாங்கிய சி.இ.ஓ., கார்த்திகா வழங்கினார். தமிழ்சங்க தலைவர்கள் தியாகதுருகம் துரைமுருகன், கல்வராயன்மலை மலரடியான், தங்கவேலு வாழ்த்துரை வழங்கினர். அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் மன்ற தலைவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
09-Jan-2025