உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் என கூறி, தங்க செயின் பறித்து சென்ற வழிப்பறி ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் மனைவி வசந்தா, 72; இவர், கடந்த 6ம் தேதி பகல் 12:00 மணியளவில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், நாங்கள் போலீஸ், பகலில் நகை அணிந்து செல்லக்கூடாது, நகையை கொடுங்கள் பத்திரமாக கவரில் போட்டு தருகிறோம் என கூறினர். தெரிவித்துள்ளனர். இதை நம்பிய வசந்தா, தான் அணிந்திருந்த 36 கிராம் தங்க தாலி செயினை கழற்றி தந்துள்ளார். உடன் மர்ம நபர்கள் நகையை கவரில் போட்டுள்ளனர். தொடர்ந்து, மர்ம நபர்கள் ஏற்கனவே கவரில் வைத்திருந்த போலி நகையை வசந்தா வைத்திருந்த பையில் போட்டுவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த வசந்தா, கவரில் இருந்த நகையை பார்த்த போது, போலி நகை என தெரிந்தது. இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து நுாதன முறையில் நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !