உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை

பெண்ணிடம் செயின் பறிப்பு; போலீஸ் விசாரணை

சின்னசேலம் ; கீழ்க்குப்பம் அருகே கிராம உதவியாளரிடம் இரண்டரை சவரன் நகையை பறித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வராணி, 37; சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் அலுவலக பணியை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றார். தோட்டப்பாடி பால் சொசைட்டி அருகே சென்ற போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் செல்வராணி அணிந்திருந்த இரண்டரை சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ