முருகன் கோவில்களில் தேரோட்டம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே முருகன் கோவில்களில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மைக்கேல்புரம், வடபொன்பரப்பி, பிரம்ம குண்டம், பாக்கம், பொரசப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று, பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு முந்தைய வழிபாடான, பூரண தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தி, தேர் இழுத்து, காவடி ஏந்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தேரோட்டம் நடக்க உள்ளது.