உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஆர்.கே.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஆர்.கே.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது. இதில், நீச்சல் போட்டியில் மாணவர் ஆற்றலரசன் முதலிடம் பிடித்தார். வாள்வீச்சு போட்டியில் மாணவர் பெரியசாமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர் காமேஷ், ஜூடோ போட்டியில் நிரஞ்சன், கிரிக்கெட்டில் மனோஜ், அருணாச்சலம், ராஜ்குமார், நைப்அலிம், தயாநிதிமாறன், புட்பால் போட்டியில் அசக்கி, யாஸ்சிப், சிவா, கவி, கபடி போட்டியில் உதயதீபன், அமுல்ராஜ் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். குத்துச்சண்டையில் சக்தி, 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அழகரசன், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திவாகர் மூன்றாமிடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். டீன் அசோக் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை