உள்ளூர் செய்திகள்

 குழந்தை இறப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிறந்து 2 நாட்களில் இறந்த பச்சிளம் குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் உடல்நிலை சரியில்லாமல் பிறந்த பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி இறந்தது. இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, திருமணமாகாத பெண் கர்ப்பமானது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை