உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில், குழந்தைகள் நலன் காப்பதில் திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படுகின்றன. அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் ஆகியவற்றிற்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருது குழந்தைகள் தினமான வரும் நவ.,14ம் தேதி வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து 5 வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பாராமிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீது எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க கூடாது. விருதிற்கான விண்ணப்ப கடிதம் உள்ளிட்டவை வரும் ஆக., 6ம் தேதிக்குள், gmail.comஎன்ற இணையதளத்திலும், கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04151 -225600, 6369107620 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை