உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமுனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மண்டல துணை தலைவர் தங்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !