நகர மன்ற கவுன்சிலர்கள் நிவாரண நிதி வழங்கல்
திருக்கோவிலுார் : பெஞ்சல் புயல் நிவாரண தொகையாக திருக்கோவிலுார் நகர மன்ற கவுன்சிலர்கள் சார்பில் 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினர்.பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக, திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் தங்களின் ஒரு மாத சம்பள தொகையான 1.50 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்தனர். இதற்கான காசோலையை நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், கலெக்டர் பிரசாந்த்திடம் வழங்கினர். நகராட்சி கமிஷனர் திவ்யா உடனிருந்தார்.