ராஜூ பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் வகுப்பு துவக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜூ பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு, ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனையில் இயங்கி வரும் ராஜூ பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் முதலாம் ஆண்டுகள் வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் இந்துபாலா வகுப்புகளை துவக்கி வைத்து பேசுகையில் '100 சதவீத வேலைவாய்ப்பு உள்ள இந்த கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். மாணவர்கள் கவனமுடன் படித்தால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. அனைத்து பிரிவுகளிலும் நவீன கருவிகள் மூலமாக முழுமையான செய்முறை வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் அனைவரும் படிப்பிற்கு பின் பணிக் காலங்களில் உயர்ந்த வாய்ப்புகளை பெற முடியும்' என்றார்.