ரூ. 5 கோடியில் வகுப்பறைகள்
ரூ. 5 கோடியில் வகுப்பறைகள்
விரைவில் திறக்க ஏற்பாடு
பள்ளியின் வளர்ச்சிக்கு பங்காற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவ்வப்போது நிறைவேற்றி, குறைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தி வருகிறோம். அமைச்சர், எம்.எல்.ஏ..விடம் கூறி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு இட வசதியை ஏற்படுத்தி, ரூ. 5 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அவை விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம். ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தருகிறோம். மாணவர்களின் முன்னேற்றமே எங்களது முன்னேற்றமாக கருதி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை மாணவிகள் நன்கு பயன்படுத்தி பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். - சிவராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.