உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன் மலையில் கலெக்டர் ஆய்வு

கல்வராயன் மலையில் கலெக்டர் ஆய்வு

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் வன உரிமைச் சான்று வழங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் வாழும் மலைவாழ் மக்கள், வன உரிமை சான்று வேண்டி மனு தாக்கல் செய்திருந்தனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அரசு அதிகாரிகள் கடந்த 10 மாதங்களில், 3071 நபர்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கினர். மேலும் விண்ணப்பித்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இது வரை வன உரிமைச் சான்று வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள நபர்களுக்கு வன உரிமைச் சான்று விரைந்து வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் ராஜா, தாசில்தார்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன் உட்பட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி