உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

விபத்தில்லா மாவட்டமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகள், அதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள், விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பதிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து போலீஸ், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்தூர்பேட்டை நகரங்களில் சீரான போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக கொண்டு வர முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர் அருண் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை