உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கலெக்டர் உத்தரவு

நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலை துறை திட்டங்களில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், சேலம் முதல் உளுந்துார்பேட்டை வரையிலான சாலை விரிவாக்கம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.அதில் ஏற்கனவே அரசு கையப்படுத்திய இடத்தில் பயன்பாட்டிற்கு போக மற்ற இடத்தை பட்டா மாற்றம் செய்தல், அரசு நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு வகைப்பாடு மாற்றம் செய்தல், தனியார் பட்டாதாரர் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த இழப்பீடு தொகையை முழுமையாக பட்டாதாரருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்த ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து நிலவகை மாற்றம் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான பணிகளை விரைவாக முடிக் கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை