உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலை பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கல்வராயன்மலை பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் நடந்த 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' முகாமில், கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கல்வராயன்மலையில் கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது. முகாமில், அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.இதில், கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், தேவைகள், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.அப்போது, அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.தொடர்ந்து, மேற்கொண்ட மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கல்வராயன்மலை பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், திட்ட இயக்குனர்கள் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை