உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குரூப் 4 தேர்வில் தேர்ச்சி கலெக்டர் பாராட்டு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி கலெக்டர் பாராட்டு

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கலெக்டர் பிரசாந்த் வாழ்த்தினார்.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக, டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான வகுப்பில்,159 பேர் பயிற்சி பெற்றனர். இதில் பங்கேற்ற ரமேஷ், வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர்; சூர்யா, நீதித்துறை தட்டச்சர்; தமிழன், தலைமைச் செயலகம் தட்டச்சர்; ராஜேஸ்வரி, கருவூலத்துறை இளநிலை உதவியாளர்; கார்த்திகேயன், வேளாண் வணிகத்துறை இளநிலை உதவியாளர்; மற்றும் ஆன்டனி அலொசியஸ், ஊரக வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர்; ஆகிய 6 பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களை தனது அலுவலகத்திற்கு கலெக்டர் பிரசாந்த் அழைத்து, பாராட்டி கேடயங்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினார். அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை