உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பசுமை சாதனையாளர் விருது இருவருக்கு கலெக்டர் வழங்கல்

பசுமை சாதனையாளர் விருது இருவருக்கு கலெக்டர் வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருவருக்கு பசுமை சாதனையாளர் விருதுகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக பணி மேற்கொள்ளும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு, ஆண்டு தோறும் பசுமை சாம்பியன் விருது மற்றும் 100 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பணம் முடிப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கு பசுமை சாதனையாளர் விருதிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மற்றும் உளுந்தூர்பேட்டை புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் பசுமை சாதனையாளர் விருது மற்றும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜேந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் ராம்குமார், பசுமைத் தோழர் ஆகான்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ