உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலக பணி ஆய்வு

கலெக்டர் அலுவலக பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் ரூ. 139.41 கோடி மதிப்பில், 35.18 ஏக்கர் பரப்பில் 8 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தினசரி நடந்து வரும் பணிகள், இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முடிவடையும் காலம் உள்ளிட்ட தகவல்கள் கேட்டறிந்த கலெக்டர், பணிகளை தரமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் கேட்டு கொண்டார். ஆய்வின் போது டி.ஆர்.ஓ., முருகன், உதவி பொறியாளர் இமாம் ஷெரிப், தாசில்தார் பசுபதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி