மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
13-Aug-2025
கள்ளக்குறிச்சி : முடியனுாரில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வரஞ்சரம் அடுத்த நின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் கிருஷ்ணவேணி, 20; கல்லுாரி மாணவி. இவர் முடியனுாரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்று வருகிறார். கடந்த 28ம் தேதி மாலை முடியனுார் பஸ்நிறுத்தத்தில் இறங்கிய கிருஷ்ணவேணி வீட்டிற்கு வந்துசேரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால், அவரது தாய் அலமேலு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Aug-2025