உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இந்திய கம்யூ., ஒன்றிய மாநாடு

இந்திய கம்யூ., ஒன்றிய மாநாடு

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் ஒன்றிய இந்திய கம்யூ., மாநாடு பகண்டைகூட்ரோட்டில் நடந்தது.மாநாட்டிற்கு, ஏழுமலை, வெங்கடேசன், சுதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் சுப்ரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.வாணாபுரம் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,தேசிய ஊரக நுாறு நாள் வேலைத் திட்டத்தில், அரசு அறிவித்த ஊதியம் 319 ரூபாயை பணி செய்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, புதிதாக ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், அப்பாவு, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.அஞ்சாபுலி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி