உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பி.டி.ஓ., அலுவலகத்தில் கம்யூ., தர்ணா போராட்டம்

பி.டி.ஓ., அலுவலகத்தில் கம்யூ., தர்ணா போராட்டம்

உளுந்தூர்பேட்டை : பி.டி.ஓ., அலுவலகத்தில் மா.கம்யூ., தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தில் சாலை மற்றும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் உளுந்தூர்பேட்டை பி.டி.ஓ., அலுவலகம் முன்பு நேற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடந்தது.இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனி, ஆறுமுகம் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் ராமர், சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனை அறிந்து பி.டி.ஓ., ராஜேந்திரன் தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைந்து சாலை பணி நடக்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி