உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம், தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி, பேருராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர். உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 50 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். இதில் பேருராட்சி துணை தலைவர் ஆஷாபீ, தொழிலதிபர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி