உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புத்தக விழாவில் போட்டி: கலெக்டர் தகவல்

புத்தக விழாவில் போட்டி: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி துருகம் சாலை வி.எம்.திடலில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நுாலக இயக்ககம் சார்பில் 3வது கல்லை புத்தகத் திருவிழா வரும் 14ம் தேதி துவங்கி, 23 வரை நடக்கிறது. இதில் 90 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் முன்னணி நிறுவன பதிப்பகத்தாரின் புத்தகங்கள்விற்பனைக்கு வைக்கப்படுகிறது.அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா, கல்லுாரி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை,பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம், தனி நடிப்பு, குறும்படம், ரீல்ஸ்உள்ளிட்ட போட்டிகள் தினமும்நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி