உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

குப்பைகளால் அவதி

எலவனாசூர்கோட்டை, புறவழிச்சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை கொட்டி அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள், பாதிப்புக்குள்ளாகின்றனர். கபிலன், எலவனாசூர்கோட்டை.

இறைச்சி கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

உளுந்துார்பேட்டையில் கட்டப்பட்ட இறைச்சி கூடம் பயன்பாடின்றி கிடப்பதால், சாலையோரம் இறைச்சி கடைகள் அதிகரித்து வருகின்றனஆறுமுகம், உளுந்துார்பேட்டை.

குப்பைகளால் துர்நாற்றம்

உளுந்துார்பேட்டை - சென்னை செல்லும் சாலையில் உள்ள பெரியேரியில் குப்பைகள் கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. கண்ணன், உளுந்துார்பேட்டை.

விபத்து அபாயம்

கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமன், கள்ளக்குறிச்சி.

போக்குவரத்து இடையூறு

கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாந்த், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை