உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

தெருநாய் தொல்லை

சங்கராபுரம் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்ரமணியன், சங்கராபுரம்.

கால்வாய் அடைப்பு

மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கனி கூட்ரோடிலிருந்து ஈருடையாம்பட்டு செல்லும் சாத்தனுார் கிளை கால்வாயில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரோக்கியராஜ், ஈருடையாம்பட்டு.

வேகத்தடையால் விபத்து

அரசம்பட்டு - பாலப்பட்டு சாலையில் அதிகளவில் உள்ள வேகத்தடைகளில் கருப்பு வெள்ளை நிறம் பூசாததால், விபத்து ஏற்பட்டு வருகிறது. சீனிவாசன், அரசம்பட்டு.

டிராபிக் ஜாம்

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூர் கூட்ரோட்டில், வாரசந்தை கட்டடத்தில் செயல்படாமல் சாலையில் சந்தை செயல்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சரவணன், மேல்சிறுவளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை