உள்ளூர் செய்திகள்

நடைபாதை ஆக்கிரமிப்பு

கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில் நடைபாதையில் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -மகேஷ், கள்ளக்குறிச்சி. - மின் விளக்கு அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி - தண்டலை சாலையில் ஏரிக்கரை பகுதியில் மின்விளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். - குணசேகரன், கள்ளக்குறிச்சி. - பயணியர் நிழ்குடை தேவை கச்சிராயபாளையம் சாலையில் சடையம்பட்டு கிராமத்திற்கு செல்லும் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயில் மழையில் பயணிகள் காத்திருக்கின்றனர். -ஞானமூர்த்தி, கள்ளக்குறிச்சி. - முறையற்ற பார்க்கிங் கள்ளக்குறிச்சியில் சேலம், சென்னை, சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகிய 4 சாலைகளிலும் பைக்குகள் தாறுமாறாக நிறுத்தி செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. -சக்திவேல், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி