உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

திருவெண்ணெய்நல்லுார்; மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருநாவலுார் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார், 45; இவர், வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். மணல் கடத்தலுக்கு செல்வகுமார் உடந்தையாக இருந்தது எஸ்.பி., மாதவன் விசாரணையில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து, செல்வகுமாரை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை