மேலும் செய்திகள்
கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
40 minutes ago
ரங்கப்பனுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
40 minutes ago
திருக்கோவிலுாரில் பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா
1 hour(s) ago
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுதும் நடந்த தேர்வுகளில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக டில்லியில் போராடிய மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் டில்லி காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அதற்கு ஆதரவளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் காங்., மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமையில் அக்கட்சியினர் சங்கராபுரத்தில் நேற்று மாலை 4:45 மணியளவில் மறியலில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். உடன் சங்கராபுரம் போலீசார், வட்டார தலைவர்கள் அப்துல் கலாம் ஆசாத், நாராயணன், பிரபு, செல்வராஜ், மாணவர் காங்., மாநில பொதுச் செயலாளர் ஆதில் கான் 15 பேரை கைது செய்தனர்.
40 minutes ago
40 minutes ago
1 hour(s) ago