உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை கிளை நுாலகத்தை பயன்படுத்தி அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் வைக்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. வாசகர் வட்ட குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் சந்திரமோகன் வரவேற்றார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் குமார், முருகன், நுாலக புறவாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர். அரசு தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்த சுரேந்தர், சேவியர், ராஜாத்தி ஆகியோருக்கு அரிமா சண்முகம் பாராட்டி சால்வை அணிவித்தார். நுாலகர் அன்பழகன் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். நுாலக பணியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ