உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் காங்., சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு

திருக்கோவிலுாரில் காங்., சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் காங்., கட்சிக்கு சொந்தமான இடத்தை சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் தங்கபாலு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுதும் காங்., கட்சிக்கு சொந்தமான இடங்களை சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலுாரில் நேற்று குழு தலைவர் தங்கபாலு தலைமையில் ஆய்வு செய்தனர். முன்னதாக குழுவினருக்கு நகர தலைவர் கதிர்வேல் வரவேற்றார்.தொடர்ந்து, ஐந்து முனை ரோடு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், ஏரிக்கரை மூலையில் உள்ள கட்சிக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டார் ஆய்வு செய்தனர். மத்திய மாவட்ட தலைவர் சீனிவாசகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கபூபதி, முருகன், மாநில செயலாளர் தயானந்தன், சிறுவை ராமமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை