உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்படும் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் ரவுண்டானா அருகில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 5.5 ஏக்கர் பரப்பளவில் 16.21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்கள் மற்றும் நகர பஸ்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், 70க்கும் மேற்பட்ட கடைகள், நேரக்காப்பாளர் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக் கப்பட்ட குடிநீர் வசதி, மின் விளக்கு வசதிகள், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். நகரமன்ற தலைவர் சுப்ராயலு, கமிஷனர் சரவணன் மற்றும் அலுலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி