உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரைஸ் சர்வ் அமைப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

ரைஸ் சர்வ் அமைப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் ரைஸ் சர்வ் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரிசி ஆலை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடான கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உற்பத்தி செய்யும் அரிசியினை விற்பனை செய்வதற்கு வசதியாக சேலத்தில் மரவள்ளிக்கான சேகோ சர்வ் உள்ளது போல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரைஸ் சர்வ் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறியப்பட்டது. அதில் அரசி ஆலை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான இடம், கட்டடங்கள், அரசின் நிதியுதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் துவங்க விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அளிக்கும் பட்சத்தில், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை