உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் ஓட்டுச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல், முகவர்கள் பெயர் பட்டியல் வழங்குதல், தபால் ஓட்டுகள், சிறப்பு முறை ஓட்டளித்தல், அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய ஓட்டுச்சாவடி அமைத்தல், சீரமைத்தல், இடமாற்றம், 2 கி.மீ.க்குள் ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ளதை உறுதி செய்தல் குறித்தும் விவாதம் நடந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் மற்றும் புகைப்படம் மாற்றம், முகவரி திருத்தம், தொகுதி மாற்றம், இறந்து போனவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் பெயர் நீக்கம் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டன.மாவட்டத்தில், 18 வயது நிரம்பிய தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இதற்கு அரசியல் கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒத்துழைக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி