நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டம் மற்றும் காஸ் ஏஜென்சி முகவர்களுடன் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்தையன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தாசில்தார்கள் நளினி, அண்ணாமலை மற்றும் நுகர்வோர் அமைப்பினர் அருண்கென்னடி, சுப்ரமணியன், மணி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், காஸ் ஏஜென்சி முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொட்ரோல் பங்குகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, காற்று பிடிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து பெட்ரோல் பங்குகளை ஆய்வு செய்து, எத்தனால் அதிகமாக கலப்பதை தடுக்க வேண்டும். சீலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வங்குவதை தடுக்க வேண்டும். காஸ் சிலிண்டர்களை எடை அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். பெட்ரோல் பங்குகளில் புகார் புத்தகம் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என நுகார்வோர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.