கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெரம்பலுார் மாவட்டம் எளம்பானுரை சேர்ந்தவர் மணிகண்டன், 42; டிரைவர். இவர் கன்டெய்னர் லாரியில்,கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று காலை 6:00 மணியளவில், உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் லாரி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.