உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடர் மழை அறுவடை பணி பாதிப்பு 

தொடர் மழை அறுவடை பணி பாதிப்பு 

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆறு, ஏரி, கிணற்று பாசனத்தை பயன்படுத்தி 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சங்கராபுரம் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியை ஒத்திவைத்துள்ளனர். தொடர் மழையால் நெற்பயிற்கள் உதிர்ந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ