உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

சின்னசேலம் : மரவானத்தம் கிராமத்தில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னசேலம் அடுத்த மரவானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; கூலித்தொழிலாளி. நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 11ம் தேதி காலை 8:00 மணிக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்து குடிந்து விழுந்தார். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஊழியர் பலி திருக்கோவிலுார் அடுத்த கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பிரவீன்குமார், 27; மின் வாரிய ஒப்பந்த ஊழியர். நேற்று முன்தினம் மாலை ஜி.அரியூரில் இருந்து திம்மச்சூர் செல்லும் சாலையில் சங்கர் என்பவரது நிலத்தின் அருகே உயர் அழுத்த மின் கம்பி இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது கம்பம் சாய்ந்து மின்சாரம் சென்ற கம்பி பட்டு பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்பாதை ஆய்வாளர் மற்றும் மின் வாரிய அலட்சிய நடவடிக்கை காரணமாக பிரவீன்குமார் உயிரிழந்ததாக அவரது தாய் ஆனந்தி அளித்த புகாரின்பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி