உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு கட்டுப்பாட்டு மையம் துவக்கம்

உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு கட்டுப்பாட்டு மையம் துவக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உயர்கல்வி ஆலோசனை பெற, மாணவர் மற்றும் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கட்டுபாட்டு மைய அறை அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்த மையத்திற்கு துணை கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அரசு பள்ளிகள், அரசு கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பன்முகத் துறைகளின் நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையம் நேற்று துவங்கிய நிலையில், வரும் அக்.,31 ம் தேதி வரை செயல்பட உள்ளது. இந்த குழுவின் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உயர்கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு கட்டுபாட்டு அறையின் 8122309830 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது, சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை