மேலும் செய்திகள்
கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்
11-Jan-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு தணிக்கை துறை குறை நிவர்த்தி ஆய்வு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சரக துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன், விழுப்புரம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் தணிகைமணி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 117 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த 2018-19ம் ஆண்டில் இருந்து 2022-23ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஆண்டு தணிக்கையின் போது எழுதப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கூட்டம் நடந்தது. இதில், அலுவலக கண்காணிப்பாளர்கள் அருள்ஜோதி, சசிகலா, வேல்முருகன், சவிதாராஜ் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள், கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Jan-2025