உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

கள்ளக்குறிச்சி: கூட்டுறவுத்துறை பணியாளர் குறை தீர்வு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சரக துணை பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன் முன்னிலை வகித்தனர். தற்போது பணியில் உள்ள சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன.கூட்டுறவு சங்க விதிகளுக்குட்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா, ராமச்சந்திரன், ரகு, கள அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !