கூட்டுறவு வார விழா ரத்த தான முகாம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர்.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். டாக்டர் விஜயகுமார், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ், திருக்கோவிலுார் நகர கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் விஜயகுமாரி முன்னிலை வகித்தனர். முகாமில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். 36 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அலுவலக கண்காணிப்பாளர் சாந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் செயலாட்சியர் நிர்மல் உட்பட பலர் பங்கேற்றனர்.